இதன்பிறகு யோகேஸ்வரன் அடிக்கடி பின்தொடர்ந்து சென்று இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். கடந்த சில நாளுக்கு முன் இளம்பெண்ணை வழிமறித்து, ‘’என்னை திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் உனது முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன். எனது மரணத்திற்கு காரணம் நீ தான் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டியுள்ளார்.
இதன்காரணமாக இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த இளம்பெண், அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் பரணிநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், துரைப்பாக்கம், ஒக்கியம்பாக்கம், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த விஷால் என்கின்ற யோகேஸ்வரனை (22) கைது செய்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ‘‘திருமணம் செய்யாவிடில் ஆசிட் வீசுவேன்’’ இளம்பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.