புதிய தேசிய கல்வி கொள்கையை அங்கீகரித்த மராட்டிய அரசு: பள்ளி படிப்பில் 3வது மொழியாக இந்தி கட்டாயம்!!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் கல்வி ஆண்டு முதல், 1 – 5 வகுப்புகளுக்கு இந்தி மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளதால் மராட்டியத்தில் 3வது மொழியாக இந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டது. இது தொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய கல்விக்கொள்கை 2020ன் ஒரு பகுதியாக, பள்ளி படிப்பில் இந்தி மொழியை கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை வரும் கல்வியாண்டு முதல் 1- 5ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் SCERT, பால்பாரதி அமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும். பழைய பாடத்திட்டத்தில் இருந்து புதிய பாடத் திட்டத்திற்கு மாறுவதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மதிப்பீடு செய்ய ‘Holistic Progress Card’ (HPC) அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post புதிய தேசிய கல்வி கொள்கையை அங்கீகரித்த மராட்டிய அரசு: பள்ளி படிப்பில் 3வது மொழியாக இந்தி கட்டாயம்!! appeared first on Dinakaran.

Related Stories: