கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

கரூர், ஏப். 17: கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் கரூர் மாவட்டத்திலுள்ள வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு காலநிலை திறன்மிகு வேளாண் முறைகள் மற்றும் நீடித்த நிலையான வேளாண்மை குறித்த ஒருநாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலமாக கரூர் மாவட்டத்திலுள்ள வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு காலநிலை திறன்மிகு வேளாண் முறைகள் மற்றும் நீடித்த நிலையான வேளாண்மை குறித்த ஒருநாள் பயிற்சிப்பட்டறை கரூரில் நடைபெற்றது. இதில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமை தாங்கி துவக்கி வைத்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், வேளாண்மைத்துறையில் ஏற்படும் செயற்கை உரம். பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தி வேளாண்காடுகள் மூலம் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினார்.

கரூர் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். இதில், காலநிலை திறன்மிகு வேளாண்மை குறித்து கரூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் கோபி வேளாண்மைத்துறையில் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கரூர் கரூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதன்மை அலுவலர் பாலசுப்ரமணியன் அவர்களும், காலநிலை மாற்றத்தால் கரூர் மாவட்டத்தில் ஏற்படும் விளைவுகள், காலநிலை திறன்மிகு வாழ்வியல் முறைகள் குறித்து முதலமைச்சரின் பசுமை தோழர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். வேளாண்மைத்துறை மிக முக்கியமானத்துறை. அனைவருக்கும் அடிப்படை தேவையான உணவு உற்பத்தி செய்யும் துறை. இதனால் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் வாயுக்களை வெளியிடவும் முடியும்.

அதனை கட்டுப்படுத்தவும் முடியும். விவசாய உற்பத்தியில் பல இலட்சம் டன்கள் தானியங்கள் போதிய வசதிகள் இன்மையால் பாதிப்படைகிறது. எனவே. காலநிலை அறிந்து, தேவை அறிந்து, இயற்கை முறையில், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்த வேண்டும். வேளாண் காடுகள் வளர்ப்பின் மூலம் மரங்கள் வளர்த்து புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) இராமசாமி, வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) லீலாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, வேளாண்மை உதவி இயக்குநர் (தரம் மற்றும் கட்டுப்பாடு). பார்த்திபன், தாந்தோணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் காதர் மொய்தீன், முன்னோடி விவசாயிகள் மனோகரன், விஷ்ணு, மதியழகன், வேளாண் உற்பத்தி அமைப்புகள், அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர்கள். வேளாண்மை அலுவலர்கள். துணை வேளாண்மை அலுவலர்கள், உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தாந்தோணி வட்டார வேளாண் மேலாளர் ஷர்மிளா நன்றி கூறினார்.

The post கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: