இந்தியர்கள் 85,000 பேருக்கு விசா சீனா தாராளம்

புதுடெல்லி: டெல்லியில் இருக்கும் சீன தூதரகத்தின் சீன தூதர் ஷூ ஃபெய்ஹோங் வெளியிட்ட பதிவில், ‘இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இம்மாதம் 9ம் தேதி வரை, இந்தியாவில் செயல்படும் சீன தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் மூலம் சீனாவிற்கு பயணிக்க விண்ணப்பித்த இந்தியர்களில் சுமார் 85,000-க்கும் மேற்பட்டோருக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல இந்திய நண்பர்கள் சீனாவிற்கு வருகை தரவும், திறந்த, பாதுகாப்பான, உற்சாகமான, நேர்மையான மற்றும் நட்பை அனுபவிக்கவும் சீனாவிற்கு அழைக்கிறோம்’ எனறு குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே பயணத்தை எளிதாக்குவதற்காக, சீன அரசு தளர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய விண்ணப்பதாரர்கள் இனிமேல் ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல், வேலை நாட்களில் விசா மையங்களில் நேரடியாக தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

The post இந்தியர்கள் 85,000 பேருக்கு விசா சீனா தாராளம் appeared first on Dinakaran.

Related Stories: