இந்நிலையில், நேற்றும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் கொடுத்திருந்த நிலையில் நேற்றும் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார். காலை 11 மணிக்கு வதேராவுடன் பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். வதேரா விசாரணைக்காக அலுவலகத்திற்கு சென்ற நிலையில் அவருக்காக பிரியங்கா காந்தி காத்திருப்போர் அறையில் காத்திருந்தார். பிற்பகல் 1.10 மணி அளவில் வதேரா மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடன் பிரியங்கா காந்தி புறப்பட்டு சென்றார். மதியத்திற்கு பிறகும் வதேராவிடம் விசாரணை தொடர்ந்தது. விசாரணைக்கு செல்லும் முன்பாக வதேரா அளித்த பேட்டியில், ‘‘ நீங்கள் எங்களை எவ்வளவு தொந்தரவு செய்கிறீர்களோ, அவ்வளவு வலிமையாகிவிடுவோம். எங்கள் வழியில் வரும் எதையும் எதிர்த்துப் போராடுவோம். மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு சேவை செய்கிறேன். மக்கள் என்னை அரசியலில் பார்க்க விரும்புகிறார்கள்’’ என்றார்.
The post அரியானா நில பேரம் வழக்கு 2வது நாளாக வதேராவிடம் அமலாக்கத்துறை விசாரணை: விரைவில் அரசியலுக்கு வருகிறாரா? appeared first on Dinakaran.
