ஐஐடியில் படித்தால் கூட வேலை கிடைப்பதில்லை: காங்கிரஸ் வேதனை


புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: ஐஐடிகள், என்ஐடிகள் மற்றும் ஐஐஐடிகள் உட்பட இந்தியாவின் பல உயர்கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக நிலைக்குழு அறிக்கை கூறுகிறது. 2021-22ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24ல், 23 ஐஐடிகளில் 22ல் அங்கு படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவது குறைந்துள்ளது. 15 ஐஐடிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளது.

31 என்ஐடிகளில் 27ல் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சரிந்துள்ளது. ஐஐடி, ஐஐஐடி, என்ஐடியில் படித்து முடித்த மாணவர்கள் பெறும் சம்பளம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் குறைந்துள்ளது. ஐஐடியில் படித்தவர்களுக்கே வேலை கிடைக்காமல் இருந்தால் மற்றவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும் என்கிற கவலை ஏற்படுகிறது என்றார்.

The post ஐஐடியில் படித்தால் கூட வேலை கிடைப்பதில்லை: காங்கிரஸ் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: