புதுடெல்லி: பணமோசடி வழக்கில் சஹாரா குழுமத்துக்கு சொந்தமான ரூ.1,460 கோடி மதிப்பிலான நிலத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வௌியிட்டுள்ள அறிக்கையில், “சஹாரா குழுமத்துக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள ரூ.1,460 கோடி மதிப்பிலான 707 ஏக்கர் ஆம்பி வேலி நகரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் சஹாரா குழும நிறுவனங்களிடமிருந்து திருப்பி விடப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி பினாமி பெயர்களில் வாங்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பணமோசடி வழக்கு: சஹாரா குழுமத்தின் ரூ.1,460 கோடி நிலம் பறிமுதல் appeared first on Dinakaran.