இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி 2022 ஜனவரி 5-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை என சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஒப்ப்தல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் appeared first on Dinakaran.