அம்பேத்கரின் விருப்பங்களை நிறைவேற்ற மோடி அரசு தயாராக இல்லை: காங். தலைவர் கார்கே விமர்சனம்

புதுடெல்லி: அம்பேத்கரின் விருப்பங்களை நிறைவேற்ற மோடி அரசு தயாராக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். மறைந்த அரசியல் சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கார்கே, “அரசியலமைப்பு சட்டம் என்பது அம்பேத்கர் குடிமக்களுக்கு அளித்த பரிசாகும்.

ஏனெனில் அது அவர்களுக்கு சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான உரிமையை வழங்குகின்றது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அடிப்படையிலேயே ஒன்றிய அரசு கொள்கைகளை வகுக்கின்றது. 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து எதுவும் தெரியவில்லை. பொது கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அப்போது தான் எந்தெந்த பிரிவினர் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பது பற்றி தெரிய வரும். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு அரசு தயாராக இல்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசானது அம்பேத்கரின் பெயரை கூறுகின்றது. ஆனால் அவரது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லை. அவர்கள் உதட்டளவில் மட்டுமே சேவை செய்கிறார்கள்” என்றார்.

The post அம்பேத்கரின் விருப்பங்களை நிறைவேற்ற மோடி அரசு தயாராக இல்லை: காங். தலைவர் கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: