இவர்கள் இருவரும் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த முயன்ற சமயத்தில், 8வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் பந்தில், ரையான் ரிக்கெல்டன் (25 பந்து, 41 ரன்) எல்பிடபிள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது, அணியின் ஸ்கோர் 75. அதையடுத்து, சூர்யகுமாருடன், திலக் வர்மா இணை சேர்ந்தார். இவர்கள் மிக நேர்த்தியாக ஆடி ரன்களை குவித்ததால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த இணை, 3வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் (28 பந்து, 40 ரன்), மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.
பின்னர், அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். விப்ரஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே, ஹர்திக் (2 ரன்), ஸ்டப்சிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதனால், திலக்குடன், நமன் திர் இணை சேர்ந்தார். சிறப்பாக ஆடிய திலக் வர்மா, 26 பந்துகளில் அரை சதம் விளாசினார். முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தில் திலக் வர்மா (33 பந்து, 3 சிக்சர், 6 பவுண்டரி, 59 ரன்) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது.
நமன் திர் (38 ரன்), வில் ஜாக்ஸ் (1 ரன் ) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் விப்ரஜ் நிகாம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி ஆட்டத்தை தொடங்கியது. முதலில் சிறப்பாக விளையாடிய அந்த அணி, கருண் நாயர் (89 ரன்) ஆட்டம் இழந்ததும் சரிவை சந்திக்க தொடங்கியது. இறுதியில், 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி, 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
The post டெல்லியை வீழ்த்தி மும்பை அணி த்ரில் வெற்றி appeared first on Dinakaran.
