நாக்பூர்: நாக்பூர் அருகே உள்ள உம்ரத் எம்ஐடிசி பகுதியில் தனியார் அலுமினிய பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் ஆலையின் ஒரு பகுதியில் பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. மேலும் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. தீ விபத்தில் காயமடைந்த 6 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தொழிற்சாலையில் தீயை அணைத்த பிறகு அங்கு 3 தொழிலாளர்களின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. 5 பேர் பலியான இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நாக்பூரில் ஆலை வெடித்து 5 பேர் பலி appeared first on Dinakaran.