ஆனால் பேச்சுவார்த்தை தொடர்பான திட்டமிடலில் சிக்கல் எழுந்ததால் அதில் தங்களால் பங்கேற்க முடியாது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஆக்ராவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உக்ரைன் போரை நிறுத்த ஆக்கபூர்வமான திட்டத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளதாகவும், அதனை அவர்கள் ஏற்காவிட்டால் அமைதிக்கான முயற்சியில் இருந்து நாங்கள் வெளியேறி விடுவோம் என்றும் தெரிவித்தார். காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். பெஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் இந்தியாவிற்கு துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்கா விலகிவிடும்: துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை! appeared first on Dinakaran.