ராமநாதபுரம், ஏப். 12: முதுகுளத்தூரில் ஏப்.15ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் நடைபெறுவதால் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:முதுகுளத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் 15.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் 5க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு பனிமனை) மற்றும் 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் நேரடியாக பயிற்சியாளர்களை தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்யவுள்ளது.
ஐ.டி.ஐயில் என்.சி.வி.டி மற்றும் எஸ்.சி.வி.டி பயிற்சி முடித்தவர்கள் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
The post தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஏப்.15ம் தேதி தேர்வு முகாம் appeared first on Dinakaran.
