திண்டுக்கல்லில் ஏப்.17ல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

திண்டுக்கல், ஏப். 12: திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஏப்.17ம் தேதி நடைபெற உள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி வரும் ஏப்.17ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அளித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் ஏப்.17ல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: