மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம்: நேபாள போலீசாரால் தேடப்பட்டவர் அசாமில் கைது


காத்மண்டு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை அமல்படுத்த வலியுறுத்தி, தலைநகர் காத்மாண்டுவில் சிலர் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கர கலவரம் வெடித்தது. இதில் கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 60 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கலவரத்திற்கு காரணமான முக்கிய நபரான துர்கா பிரசாய் என்பவரை நேபாள போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் நேபாளத்தை ஒட்டிய பகுதியில் பதுங்கியிருந்த துர்கா பிரசாயை அசாம் போலீசார் கைது செய்து நேபாள போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

The post மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம்: நேபாள போலீசாரால் தேடப்பட்டவர் அசாமில் கைது appeared first on Dinakaran.

Related Stories: