அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

பென்னாகரம், ஏப்.11: பென்னாகரம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்து, நோயாகளிடம் குறை கேட்டறிந்தார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனை கட்டுமான பணிகளை, தர்மபுரி கலெக்டர் சதீஷ் நேற்று நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், ரத்தம் சுத்திகரிப்பு மையம், டயாலிசிஸ் பிரிவு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பதிவேடு மற்றும் தற்போது உள்ள மகப்பேறு அறை உள்ளிட்டவட்டை ஆய்வு மேற்கொண்டார்.

திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையில் மருத்துவம் நன்றாக வழங்கப்படுகிறதா? மருத்துவர்கள் நோயாளிகளிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பது குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் கனிமொழி, தாசில்தார் பிரசன்னமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: