டொமினிகன் இரவு விடுதியில் பலி 221 ஆக அதிகரிப்பு

சான்டோ டொமின்கோ: கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சான்டோ டொமின்கோவில் கடந்த 8ம் தேதி அதிகாலை இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இரவுவிடுதியில் இருந்தனர்.

மேற்கூரை இடிந்ததில் பலர் இடிபாடுகளில் புதைந்தனர். கடந்த 3 நாட்களாக நடந்த மீட்பு பணியில் பலி எண்ணிக்கை 221 ஆக அதிகரித்தது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 3 நாள் மீட்புப் பணியில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்பதால் மாயமானவர்களின் உறவினர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

The post டொமினிகன் இரவு விடுதியில் பலி 221 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: