மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆயுதமேந்திய தீவிரவாத நடவடிக்கைகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் முச்சந்திப்பு வனப்பகுதிகளில் 2013ம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 3 மாநிலங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இடசாரி தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் சார்பில் சிறப்பு இலக்குப்படை, கேரளா சார்பில் சிறப்பு செயலாக்கக்குழு, கர்நாடகம் சார்பில் நக்கல் எதிர்ப்புப்படை ஆகியவை இணைந்து கேரளா மாநிலம் வயநாடு, பாலக்காடு, மலப்புரம், கர்நாடகா மாநலிம் சாம்ராஜ்நகர், தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட மொத்தம் 9 முறை கூட்டு வனத்தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு சிறப்பு இலக்கு படையினரால் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முக்கிய மாவோயிஸ்ட் ஒருவரும், ‘க்யூ’ பிரிவின் நடவடிக்கையில் ெபண் மாவோயிஸ்ட் ஒருவரும் தமிழக, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் சிறப்பு படைகள் எடுத்த தொடர் நடவடிக்கைகளால் மாவோயிஸ்ட்களின் வெளிப்படையான நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 7ம் தேதி முதல் 9ம்தேதி வரை தமிழ்நாடு சிறப்பு இலக்குப்படை ஐஜி மயில்வாகனன் சேரளா வயநாடு, கர்நாடகா மாநலிம் சாம்ராஜ்நகர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 2 வெவ்வேறு வனப்பகுதிகளில் ‘வனப்பாதுகாப்பு’ என்ற பெயரில் கூட்டு வனத்தேடுதல் வேட்டைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டைகளின் போது, மழைப்பொழிவும், ஆபத்தான விலங்குகள் மற்றும் உயிரினங்கள் காணப்பட்ட சூழ்நிலையிலும் இத்தேடுதல் வேட்டைகளானது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இத்தேடுதல் நடவடிக்கைகளின் வழியாக மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பு செய்யப்பட்டது. இத்தேடுதல் வேட்டைகளின் போது சந்தேகத்திற்கு இடமான இடதுசாமி தீவிரவாதிகளின் நடமாட்டமும் கண்டறியப்படவில்லை. நிறைவாக தெப்பக்காட்டில் கூட்டு குழுக்களுடன் கலந்து பேசி செயலாக்க மேம்பாட்டிற்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கிடையேயான எல்லைப்பகுதிகள் தொடர்ந்து தமிழ்நாடு சிறப்பு இலக்கு படையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக, கேரளா, கர்நாடகா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை கைது செய்ய 3 மாநில கூட்டு தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.