முத்தையாபுரத்தில் பைக் விபத்தில் தொழிலாளி சிறுவன் படுகாயம்

ஸ்பிக்நகர், ஏப். 10: தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (46). தொழிலாளியான இவர், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் பைக்கில் சாலையை கடக்க முயன்றார். அப்போது முள்ளக்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் முருகேசன் மற்றும் எதிரே பைக்கில் வந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து முத்தையாபுரம் எஸ்ஐ ராம கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார். மகளிர் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி விசாரணை நடத்தி வருகிறார். ஆத்தூரில் இருந்து வை. தூத்துக்குடிக்கு அரசு பஸ்கள் இயக்கம் ஆறுமுகநேரி, ஏப். 10: ஆத்தூரில் இருந்து வை., தூத்துக்குடிக்கு அரசு பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலாத்தூர் வெள்ளக்கோவிலில் இருந்து ஆத்தூர், ஏரல், சிவகளை வழியாக வைகுண்டத்துக்கு புதிய வழித்தடத்திலும், குரும்பூரில் இருந்து வரண்டியவேல், ஆத்தூர், முக்காணி வழியாக தூத்துக்குடிக்கு பழைய வழித்தடத்தில் பேருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதையேற்று இந்த இரு வழித்தடத்திலும் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து இரு வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்க துவக்க நிகழ்ச்சி, ஆத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாறன், தாசில்தார் பாலசுந்தரம், போக்குவரத்து துறை தூத்துக்குடி கோட்ட மேலாளர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இரு வழித்தடத்திலும் 2 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆத்தூர் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்காக 15வது நிதிக்குழு டைய்டு மானியம் 2023-24ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 2 மினி டிப்பர் வாகனங்களையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வைகுண்டம் பணிமனை மேலாளர் ஜெகதீசன், திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ஜனகர், விவசாய துணை அமைப்பாளர் மாணிக்கவாசகம், ஒன்றிய செயலாளர்கள் சதீஸ்குமார், செங்குழி ரமேஷ், நவீன்குமார், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், செயல் அலுவலர் பாபு(பொ), ஆத்தூர் கீழ் பகுதி விவசாய சங்க தலைவர் செல்வம், பஞ். முன்னாள் தலைவர்கள் சோபியா, பக்கீர் முகைதீன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயக்கொடி, யூனியன் முன்னாள் கவுன்சிலர்கள் மாரிமுத்து, ரகுராம், விவசாய அணி அமைப்பாளர் அரவிந்தன், துணை அமைப்பாளர் லிங்கராஜ், மாணவரணி ராஜேஷ், ஆத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், கேசவன், அசோக்குமார், முத்து, சிவா, ராஜலட்சுமி முருகன், கோமதி, கமலச் செல்வி, வசந்தி, இளைஞரணி சிவபெருமாள், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முத்தையாபுரத்தில் பைக் விபத்தில் தொழிலாளி சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: