திருவாரூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் தேர்வு செய்தவர்களுக்கு பணிநியமன ஆணை

திருவாரூர், ஏப். 10: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணிநியமன ஆணையினை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் பதவிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்- தொகுதி தேர்வில் வெற்றி பெற்று திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணிநியமன ஆணையினை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் தேர்வு செய்தவர்களுக்கு பணிநியமன ஆணை appeared first on Dinakaran.

Related Stories: