கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

செங்கோட்டை,ஏப்.10: அச்சன்புதூரில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கோட்டை அருகே அச்சன்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடை்ததது. அதனடிப்படையில் அச்சன்புதூர் போலீசார் மற்றும் சிவில் சப்ளை தாசில்தார் தலைமையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது நெடுவயல் ரேஷன் கடை அருகேயும், பார்வதிபுரம் ரேஷன் கடை அருகேயும், கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 47 மூடைகள் கொண்ட 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த நெடுவயல் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (25), பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் (48), சுப்புலட்சுமி(56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அச்சன் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரசுக்கு குமரி அனந்தன் ஆற்றிய பணிகள் அளப்பரியது நெல்லை, ஏப். 10: காங்கிரஸ் கட்சிக்கு குமரி அனந்தன் ஆற்றிய பணிகள் அளப்பரியது என நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும். தமிழ் மொழி பற்றாளருமான குமரி அனந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி: ”காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், காமராஜரின் தொண்டனாகவும், தமிழ் மொழி பற்றாளராகவும் விளங்கிய குமரி அனந்தன் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

அவருடன் நான் பழகிய நாட்களை என்னால் மறக்க முடியாது. காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அவர் தமிழ் மொழி பற்றால் பல இலக்கிய நூல்களை எழுதியதால் ”இலக்கியச் செல்வர்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அவர் தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் ஆற்றிய பணிக்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு‘‘தகைசால் தமிழர் விருது” வழங்கி பெருமைப்படுத்தியது.

எம்பியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை பெற்றுத் தந்தவர். சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். காங்கிரஸ் தலைவராக உயர்ந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரின் இழப்பு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

The post கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: