திருப்பூண்டி கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

கீழ்வேளூர், ஏப். 10: நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் – தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பூண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில இரவு நேரத்தில் கால்நடைகள் சுற்றி திரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்க ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலையின் குறுக்கே படுத்துக் கொள்ளும் மாடுகள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் போது வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாக நேரிடுகிறது. வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், கால்நடைகள் வளர்ப்போர் அதனை கட்டி பராமரிக்க வேண்டுமென்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

The post திருப்பூண்டி கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: