விருதுநகர், ஏப்.10: வருகிற ஏப்.25ல் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஏப்.25 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post ஏப்.25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.