மூணாறு, ஏப்.10: மூணாறு அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மூணாறு அருகே குரிசுபாறை பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் நேற்று முன்தினம் பெண் தொழிலாளர்கள் உட்பட பலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக காய்ந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் தோட்ட மேற்பார்வையாளரான கட்டப்பனை ஆனவிலாசம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் ராகவன் (48) என்பவர் படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அடிமாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமத்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் அடிமாலி தாலுகா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.
The post மூணாறு அருகே மரக்கிளை முறிந்து விழுந்து ஊழியர் பலி appeared first on Dinakaran.