அமெரிக்காவில் இரண்டு வகையான விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டங்கள் உள்ளன. ஒன்று படிக்கும் போதே பதிவு செய்யும் முறை, மற்றொன்று படிப்பு முடிந்த பின் பதிவு செய்யும் முறை. படிக்கும் போதே ஒரு மாணவர் இத்திட்டத்தில் பயன் பெற்றால், அவர் வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்யலாம். வகுப்புகள் இல்லாத பட்சத்தில், அவர் முழு நேரமும் வேலை செய்யலாம். மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகும், விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இது மற்றொரு முறை. ஒரு மாணவர் ஸ்டெம் துறையில் அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தில் பட்டம் பெற்றிருந்தால், அவருக்கு இந்த அனுமதி மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.
தற்போது இந்த விருப்ப நடைமுறை பயிற்சி திட்டத்தை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் 3,00,000 இந்திய மாணவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாணவர்கள் உடனடியாக எச்1பி பணி விசாவைப் பெற வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இதனால் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
* ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்தும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் அமெரிக்கா சென்று படிக்கின்றனர்.
* 2023ஆம் ஆண்டில் 5,39,382 வெளிநாட்டு மாணவர்கள் விருப்ப நடைமுறை பயிற்சி திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர்.
* 2023-24ஆம் ஆண்டில் 3.31 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவிற்கு கல்வி பயிலச் சென்றுள்ளனர்.
* இந்த மாணவர்களில் 29.42 சதவீதம் பேர் அதாவது 97 ஆயிரத்து 556 பேர் விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டத்தைத் தேர்வு செய்தவர்கள்.
The post அமெரிக்காவில் விருப்ப நடைமுறை பயிற்சி திட்டம் ரத்து; 3 லட்சம் இந்திய மாணவர்களுக்கு ஆபத்து: அதிபர் டிரம்ப் முடிவால் அதிர்ச்சி appeared first on Dinakaran.