இந்த சம்பவம் குறித்து உடனே ஹிரோஷி விமான பணிப்பெண்ணிடம் புகார் அளித்தார். விமான பணியாளர்களான சுன்ப்ரீத் சிங் மற்றும் ரிஷிகா மாத்ரே ஹிரோஷிக்கு மாற்று துணிகள் வழங்கியுள்ளனர். துஷாரை வேறு ஒரு இருக்கையில் அமருமாறு கூறிய விமான பணியாளர்கள் விமான கேப்டனுக்கும் தகவல் தெரிவித்தனர். தன் தவறுக்காக மசந்த், அந்த பயணியிடம் மன்னிப்புக் கேட்டதாகவும், அந்த மன்னிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. விமானம் தரையிறங்கிய பிறகு அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. புகார் இல்லாமலேயே, துஷார் மசந்த்துக்கு வாய்மொழி எச்சரிக்கையை விமான நிறுவன அதிகாரிகள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2023 ல் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு மூதாட்டி பயணித்தார். போதையில் இருந்த ஆண் பயணி மூதாட்டி மீது சிறுநீர் கழித்துள்ளார்.இது தொடர்பாக சங்கர் மிஸ்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
The post விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இன்னொரு பயணியால் பரபரப்பு appeared first on Dinakaran.