போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து உயிர் தப்பிய எம்எல்ஏ: மணிப்பூரில் பயங்கரம்

இம்பால்: மணிப்பூரில் போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து எம்எல்ஏ நூருல் ஹாசன் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த தேசிய மக்கள் கட்சியின் க்ஷேத்ரிகாவ் தொகுதியின் எம்எல்ஏ நூருல் ஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன் தனது சகோதரியின் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டார். அந்த விருந்து முடிந்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரை மடக்கிய 100 பேர் கொண்ட கும்பல் எம்எல்ஏவை சுற்றிவளைத்து பிடித்தது. பின்னர் அந்த கும்பல் அவரது கழுத்தை பிடித்து நெரித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த கும்பலில் இருந்து உயிர் தப்பிய எம்எல்ஏ நூருல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சைக்கு பின்னர் தற்போது வீடு திரும்பிய அவர், நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த வாரம் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினேன். திட்டமிடப்பட்டு நடத்திய இந்த தாக்குதலில் 100 போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருந்தனர். அவர்கள் எனது கையைப் பிடித்து, கழுத்தை நெரிக்க முயன்றனர். என்னை கொல்ல முயன்றனர். அவர்கள் துப்பாக்கியால் வானத்தை சுடவும் செய்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களிடம் இருந்து உயிர் தப்பினேன்’ என்றார். எம்எல்ஏவை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து உயிர் தப்பிய எம்எல்ஏ: மணிப்பூரில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: