காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகள் கேட்டவர் குமரி அனந்தன். தமிழ் மக்கள் நலனுக்காக, நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்காக குமரி அனந்தன் அளித்த பங்களிப்பு நினைவிற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர் குமரி அனந்தன் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பனை பாதுகாப்பு, மதுவிலக்குக்காக பல போராட்டங்களை நடத்தியவர் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

The post காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: