தூத்துக்குடி, ஏப். 9: தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில் நீர்மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட விஎம்எஸ் நகர், சின்னக்கண்ணுபுரத்தில் மாநகராட்சி பணிக்குழு தலைவரும், மாநகர திமுக துணை செயலாளருமான கீதா முருகேசன் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்மோர் பந்தல்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, தர்பூசணி உள்பட பல்வேறு வகையான பழங்களை வழங்கினார். பின்னர் நிர்வாகிகளிடம் கோடை காலம் முடியும் வரை இதை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயனடையும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர வழக்கறிஞரணி தலைவர் நாகராஜன் பாபு, வட்ட செயலாளர் சேகர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொறியாளரணி தலைவர் பழனி, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், படையப்பா மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சண்முகபுரம், டூவிபுரம் பகுதிகளில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தூத்துக்குடி, ஏப். 9: சண்முகபுரம், டூவிபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை, பேவர் பிளாக் சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, உயர்கோபுர மின் விளக்குகள், பூங்காக்கள், படிப்பகங்கள், புதிய குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சீரான குடிநீர் வழங்கும் விதமாக சண்முகபுரம், டூவிபுரம், ராஜபிள்ளை சந்து ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் அறிவுறுத்தலின்படி மாநகரில் அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்படும். தற்போது பல்வேறு இடங்களில் சீரான குடிநீர் வழங்குவதற்காக புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற பணிகளினால் மாநகரப் பகுதிகளில் வரும் காலங்களில் சீரான குடிநீர் வழங்கப்படும், என்றார். அப்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post விஎம்எஸ் நகர், சின்னக்கண்ணுபுரத்தில் திமுக நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.