தஞ்சாவூர்,ஏப்.9: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறு த்தி தஞ்சையில் நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடைபணி யாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தாமரைச்செ ல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளார் கரிகாலன் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் முருகானந்தம், இணை செயலாளர்கள் பிரித்திவிராஜன், பஞ்சாபிகேசன், துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவகுருநாதன், மாவட்டத் துணைத் தலைவர் தமிழரசன், வட்டத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். எடை தராசும், அலுவலக கணினையோடு இணைத்து ரசீது வழங்கிய பின்பு தான் நியாயவிலை கடை தராசிற்கும் பிஒஎஸ் விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
பொதுநியாகத் திட்டத்திற்கு தனித்துறைஉருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் தனவேல், அன்பழகன், ரமேஷ், கார்த்திகேயன், கலைவாணன், வைத்திலிங்கம், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
The post 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.