பாலக்காடு: பாலக்காடு அருகே போக்குவரத்து விதியைமீறி கார் கதவில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே வாளையார் சாலையில் கடந்த 6ம் தேதி வாலிபர்கள் 4 பேர் காரில் அதிவேகமாக சென்றுள்ளனர். இதில் 3 பேர் போக்குவரத்து விதியை மீறி கார் கதவின் மேல் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தலங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி கசபா போலீசார் விசாரித்தனர்.
இதில், காரில் விதிமீறி சாகச பயணம் செய்தது பாலக்காடு கல்பாத்தி குன்னும்புரத்தைச் சேர்ந்த முகமதுஷாலிக் (20), ஷமீர் (19), அப்துல்சமத் (20) மற்றும் கார் உரிமையாளர் திருநெல்லாயைச் சேர்ந்த திலீப் (25) ஆகிய 4 பேர் என்பது தெரிந்தது. போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் சாகம் பயணம் செல்ல பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
The post பாலக்காடு அருகே விதிமீறி கார் கதவில் அமர்ந்து ஆபத்தான பயணம்: 4 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.