சென்னை: அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துப் பேசினார். தமிழக சட்டப்பேரவையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கட்சியான அதிமுக, ஒன்றியத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் தவிர்த்து அனைவரும் வரவேற்று பேசினர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து கட்சி உறுப்பினர்கள் வரவேற்று பேசி மகிழ்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு இங்குள்ள அனைத்து உறுப்பினர்கள், மக்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவை முன்னவர் நெகிழ்ச்சியாக பேசிய போது, கலைஞர் மடியில் நான் வளர்ந்தவர் என்றார். அவர் கலைஞர் மடியில் வளர்ந்த போது, நான் உங்கள் மடியில் வளர்ந்தவன். கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன். அதிமுக, பாஜக உறுப்பினர்கள் தவிர்த்து அனைவரும் மேஜை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று முதல்வர் பேசினார்.
மேஜையை தட்டி வரவேற்பு
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையிலிருந்து எழுந்து மேஜையை தட்டி ஆர வாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
The post உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பேசிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கு முதல்வர் நன்றி appeared first on Dinakaran.