அந்த சமயத்தில் அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐஎன்எஸ் திரிகண்ட் என்ற போர் கப்பலுக்கு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து திரிகண்ட் கப்பல் அங்கு விரைந்து சென்றது. போர் கப்பலில் இருந்த மருத்துவ குழுவினர் மீன் பிடி படகில் ஏறி அதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பாகிஸ்தான் மீனவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர். மேலும் படகில் இருந்த 11 பாகிஸ்தான், 5 ஈரான் ஊழியர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் இந்திய கடற்படையினர் வழங்கினர்.
The post ஓமன் அருகே படுகாயத்துடன் நடுக்கடலில் தவித்த பாக். மீனவருக்கு இந்திய கடற்படை சிகிச்சை appeared first on Dinakaran.
