* மும்பை அணிக்கு இது 5வது லீக் போட்டி. இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது.
* பெங்களூரு அணி, இன்று தனது 4வது லீக் போட்டியில் ஆடுகிறது. அந்த அணி இதுவரை, 3 போட்டிகளில் ஆடியுள்ளது. இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
* முதல் இரு போட்டிகளில் வெற்றி, 3வது போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி, இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.
* முதல் இரு போட்டிகளில் தோல்வி, 3வது போட்டியில் வெற்றி, மீண்டும் 4வது போட்டியில் தோல்வி என, பெரும்பான்மை தோல்விகளை சந்தித்துள்ள ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி, முதல் நான்கு இடங்களில் ஒன்றை பிடிக்க இன்றைய போட்டியில் கடுமையாக போராடும்.
* மும்பை, பெங்களூரு அணிகள் இதுவரை, 33 போட்டிகளில் நேருக்கு நேர் ஆடியுள்ளன.
* அவற்றில், மும்பை 19 போட்டிகளில் வென்றுள்ளது. பெங்களூரு அணி 14ல் வெற்றியை ருசித்துள்ளது.
* இந்த இரு அணிகளும் மோதிய போட்டிகளில், அதிகபட்சமாக மும்பை 213 ரன்களும், பெங்களூரு 235 ரன்களும் குவித்துள்ளன.
* இரு அணிகள் மோதிய போட்டிகளில், குறைந்தபட்சமாக, மும்பை 111, பெங்களூரு 122 ரன்களை எடுத்துள்ளன.
* மும்பை அணி, பெங்களூரு அணிக்கு எதிராக உள்ளூர் மைதானத்தில் ஆடும்போது அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. இருப்பினும், நடப்பு தொடரில் இரு அணிகளும் சமபலத்தில் உள்ளதால் இன்றைய போட்டி சவாலானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
The post ஐபில் தொடரில் இன்று பெங்களூரு, மும்பை மோதல் appeared first on Dinakaran.