வக்பு வாரிய திருத்த மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டி சொத்துரிமையை பறிக்கும்: காங்கிரஸ் கண்டனம்

சென்னை: வக்பு வாரிய திருத்த மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டி சொத்துரிமையை பறிக்கும் என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: வக்பு திருத்த மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும் அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளைப் பறிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என்பது உறுதியாகியுள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜ மற்றும் அவர்களது கூட்டாளிகளால் அரசியலமைப்பின் மீதான இந்தத் தாக்குதல் இன்று முஸ்லிம்களை இலக்காகக் கொண்டது. எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது.

இந்தச் சட்டம் இந்தியாவின் கருத்தையே தாக்குவதாலும், மத சுதந்திர உரிமையான 25வது பிரிவை மீறுவதாலும் காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தது கிறிஸ்தவர்களை குறி வைக்க திட்டமிட்டுள்ளது தெளிவாகியுள்ளது. சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களை, மோடி அரசின் பாசிச தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கமும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post வக்பு வாரிய திருத்த மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டி சொத்துரிமையை பறிக்கும்: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: