சென்னை: குரூப் தேர்வுகளுக்கு திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, அசோக் நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலைவாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளை கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த பயிலகத்தில் பயிற்சி பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிலகத்தில் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு டிஎன்பிஎஸ்சி மற்றும் எஸ்.ஐ. தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்க உள்ளன. மேலும், பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், அலைபேசி (8610392275), மின்னஞ்சல் (thirumapayilagam@gmail.com) ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயிலகத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும்.
The post திருமா பயிலகத்தின் சார்பில் குரூப் தேர்வுக்கு 27ம்தேதி முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.