விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

விருதுநகர்: விருதுநகர், மதுரை ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 28 துவங்கி ஏப்.20ம் தேதி வரை பொருட்காட்சி நடைபெறுகிறது. இதில் பல்வகையான பொருட்கள் விற்பனை, உணவு விற்பனை நிலையங்கள், 8க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ராட்டினங்கள், உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு தலைகீழாக சுற்றும் சுனாமி ராட்டினத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோரை ஏற்றி சுற்றியபோது, விருதுநகர் பாத்திமாநகரை சேர்ந்த காளிராஜ் மகள் கவுசல்யா(22), ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்தார்.
படுகாயமடைந்த அவரை, உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு, விருதுநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார், சுனாமி ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர் தேவேந்திரா, மேலாளர் அஜிஸ்குர்னார், ஆபரேட்டர் முகேஷ் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: