100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி தர மறுப்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பொன்குமார் தலைமையில் நடந்தது

சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராத ஒன்றிய மோடி அரசை கண்டித்து விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தலைவர் பொன்குமார் தொடங்கி வைத்து பேசுகையில், “தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கின்ற வகையில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை தராமல் வஞ்சகம் செய்து வருகிறது. தொழிலாளர்களின் வயிற்றில் மோடி அரசு அடிக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டமானாலும், கல்விக்கு ஓன்றிய அரசு ஓதுக்க வேண்டிய நிதியானாலும், இயற்கை பேரிடர் காலங்களில் உதவ வேண்டிய தொகையானாலும் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு தராமல் வஞ்சிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் எம்.சமயசெல்வம் தலைமை தாங்கினார்.

தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கவிஞர் குருநாகலிங்கம், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் எஸ்.பாலன், அமைப்பு செயலாளர் ஏ.ஜெ.நாகராஜ், மாநில மகளிரணித் துணைத் தலைவர் எஸ்.பசும்பொன், மாவட்டச் செயலாளர் ஏம்,வீரகுமார். மாவட்டப் பொருளாளர் ஆர்.ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி தர மறுப்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பொன்குமார் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: