ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழுப்புரம் – புதுவை, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம் – தஞ்சை 4 வழிச்சாலைகளை அர்ப்பணித்தார். பின்னர் ‘வணக்கம். என் அன்பு இனிய தமிழ்ச் சொந்தங்களே’ எனக் கூறி பிரதமர் உரையை தொடங்கினார். அவர் ஆற்றிய உரையில்; “ரயில் மற்றும் சாலை திட்டங்கள் தமிழ்நாட்டின் இணைப்புகளை வலுப்படுத்தும். ராமேஸ்வரம் பாம்பன் பாலம் தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்று சேர்க்கிறது. 21ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதம் ராமேஸ்வரம் புதிய ரயில் பாலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நகரம் இது. அப்துல் கலாமின் பூமி இது” என ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
The post ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.