தேனி: தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த 40 வயது தொழிலாளிக்கும், போடி பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தொழிலாளிக்கு இதுதான் முதல் திருமணம். ஆனால், அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் 2 கணவர்களும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 3வது திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின்போதே பெண்ணின் வயிறு சற்று பெரிதாக காணப்பட்டதாம். இருப்பினும், மணமகன் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், மாதங்கள் செல்ல, ெசல்ல மனைவியின் வயிறு பெரிதாகவே கணவர் சந்தேகம் அடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், `உனது மனைவி கர்ப்பிணியாக இருப்பதாக’ தெரிவித்தனர். திருமணத்தின்போதே அப்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. இருப்பினும் மனைவி மீது பரிதாபம் கொண்டு சேர்ந்து வாழ கணவர் தீர்மானித்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் திடீரென அவரது மனைவி வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து சின்னமனூர் காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அப்பெண் தேனியில் தனியார் காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது. போலீசார் மற்றும் பெண்ணின் கணவர் அங்கு சென்று பார்த்தபோது அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பமில்லை என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் தன்னை அந்த பெண் ஏமாற்றியதை நினைத்து புலம்பியபடி காப்பகத்தில் இருந்து வெளியேறினார்.
The post திருமணமான 4 மாதத்தில் மனைவிக்கு குழந்தை:கணவர் அதிர்ச்சி appeared first on Dinakaran.