மேலும் முன்னோக்கி நகரும் கடல் தொழில் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நவீன தொழில்நுட்ப சிமுலேட்டர்கள், சிறப்பு மேம்பாட்டு மையங்கள், டிஎன்வி வழங்கும் ஐஎஸ்ஓ 9001:2015 சான்றிதழ் மற்றும் உலகளாவிய கப்பல் நிறுவனங்களின் ஒத்துழைப்பு ஆகியவையுடன் அமெட் பல்கலைக்கழகம் முன்னணி நிலையை பிடித்துள்ளது. இந்நிலையில், அமெட் பல்கலைக்கழகத்தில் கடந்த 11ம் தேதி சர்வதேச உறவுகள் மையம், கடல் நிலைத்தன்மையை வழிநடத்துதல் (Navigating Maritime Sustainability) எனும் தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இதில் அமெட் பல்கலை வேந்தர் டாக்டர் ஜெ.ராமச்சந்திரன், சீனாவின் டேலியன் பல்கலை வேந்தர் ஷான் ஹொங்ஜுன், ஜப்பானின் ஐஏஎம்யு நிர்வாக இயக்குநர் டகேஷி நகஸாவா உள்பட உலகளாவிய கடல்சார் நிபுணா்கள், ஆய்வாளர்கள், தொழில் தலைவர்கள் மற்றும் பசுமை சூழலியல் நிபுணா்கள் பங்கேற்று, கடல்சார் நிலைத்தன்மையை வழிநடத்துதல் உள்பட பல்வேறு முக்கிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். இதன் முக்கிய நிகழ்வாக, 3 பிரபலமான கடல்சார் கல்வி நிறுவனங்களுடன் MoUs ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் கல்வி பரிமாற்றம், கூட்டு ஆய்வுகள், இணைந்த ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் மாணவர், பேராசிரியர் பரிமாற்றம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
இத்தகைய வழிநடத்துதலின் மூலமாக உலகளாவிய கலந்துரையாடல், ஒத்துழைப்புகளுக்கு அமெட் பல்கலைக்கழகம் தூண்டுதலாக இருந்து, எதிர்காலத்தில் சிறந்த கடல்சார் நிபுணர்களை உருவாக்கி, நிலைத்த கடல்சார் தொழில்முறைகளுக்கு வழிகாட்டி வருகிறது.
The post அமெட் பல்கலைக்கழகத்தில் கடல்சார் நிலைத்தன்மையை வழிநடத்தும் மாநாடு: உலக நிபுணர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.