மகாவீர் ஜெயந்தி விழா ஏப்.10ல் டாஸ்மாக் மூடல்

மதுரை, ஏப். 5: மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஏப்.10ம் தேதி மது கடைகள் மற்றும் மது கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் உரிமம் பெற்று இயங்கி வரும் பார்கள் மற்றும் உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லறை விற்பனை மது கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது கூடங்கள், உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும் ஏப்.10ம் தேதி (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

 

The post மகாவீர் ஜெயந்தி விழா ஏப்.10ல் டாஸ்மாக் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: