த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அமல்

சென்னை: நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில மாதங்களாக முழு அரசியலில் ஈடுபட துவங்கியுள்ளார். அரசியலில் ஈடுபடும் அவருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்தது. இதையடுத்து, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

கடந்த மாதம் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் ஒய் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், துணை ராணுவ படை அதிகாரிகள், தமிழக காவல்துறை சார்பாக நீலாங்கரை உதவி கமிஷனர் பரத் தலைமையிலான போலீசார் மற்றும் த.வெ.க., தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, ஒய் பிரிவு பாதுகாப்பு போலீசாருக்கு தங்குவதற்கான இடம் வழங்கப்பட்ட பின், பாதுகாப்பு பணியை தொடங்குவர் என கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறை அமலுக்கு வந்தது. இதுவரை வெளிநாட்டு பவுன்சர்கள் விஜய்யின் பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அளித்த நிலையில் இனி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை கமாண்டோக்களின் பாதுகாப்பு வளையத்திற்குள் விஜய் இருப்பார். இந்த பாதுகாப்பு பணியில் 8 முதல் 12 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர். அவர்களில் ஒருவர் விஜய்யுடன் எப்போதும் உடனிருப்பார் என தெரியவருகிறது.

The post த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அமல் appeared first on Dinakaran.

Related Stories: