ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ‘மார்க்ரெட்’ என்ற பெயரில் ‘ஏஐ’ ஆசிரியர் அறிமுகம் செய்யபட்டுள்ளது. மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இது, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சர்ச் என்ஜின் உதவியுடன் பதிலளிக்கிறது. இதற்கு 25 இந்திய மொழிகள், 25 சர்வதேச மொழிகளை பேசமுடியும் எனவும் கூறப்படுகிறது.