குறு, சிறு நிறுவனங்கள் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன பதிவு ரத்து செய்வதை வைத்து மூடப்பட்டது என கூற முடியாது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கோவை சிங்காநல்லூர் ஜெயராமன் (அதிமுக) பேசும்போது, ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. மின் கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுகிறது’ என்று கூறினார். இதற்கு பதில் அளித்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

புதிய வருமான வரி சட்டப்படி கொள்முதல் செய்த நிறுவனங்கள், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அல்லது அந்த நிதியாண்டின் மார்ச் 31க்குள் தொகையினை வழங்கினால் மட்டுமே, அந்த நிதியாண்டில் வரவு செலவு கணக்கில், இந்த தொகை செலவு கணக்கில் கொண்டு வர அனுமதிக்கப்படும். இல்லையெனில், இத்தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும்.

இந்த புதிய சட்ட விதியின்படி பெரு நிறுவனங்கள் உரிய நாட்களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், உதயம் பதிவு செய்த குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதை பெரு நிறுவனங்கள் தவிர்க்கின்றன. அல்லது குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை உதயம் பதிவினை ரத்து செய்ய வற்புறுத்துகின்றன என்பதால் ஒரு சில குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் உதயம் பதிவினை ரத்து செய்துள்ளன. ஆனால், நிறுவனங்கள் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன. பதிவு ரத்து செய்ததை கணக்கில் எடுத்துக் கொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டது என கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post குறு, சிறு நிறுவனங்கள் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன பதிவு ரத்து செய்வதை வைத்து மூடப்பட்டது என கூற முடியாது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: