இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை வரவு-செலவு கணக்குகளை திட்டமிட்டு நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: 1959ம் ஆண்டு, இந்து சமய அறநிலையத் துறை கொடைகள் சட்டத்தின்படி தான் துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருக்கோயிலுக்கு வருகிற வருமானத்தில்கூட, 25 சதவீதம் தான் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமென்று சட்டத்தில் இருக்கிறது.
அதேபோல், திருக்கோயில் நிதியில் செலவிடப்படுகின்ற அனைத்து செலவுகளும் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆடிட் செய்யப்படுகிறது. எனவே, அனைத்து செலவுகளும், அனைத்து பணிகளும் முறையாக நடந்து கொண்டிருக்கின்ற ஆட்சி, இந்த திராவிட மாடல் ஆட்சி. அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே 2023 ஆகஸ்ட் 27ம்தேதி நோயாளர்களுடன், பார்வையாளர்கள் தங்குகின்ற அறை ரூ.90 லட்சம் செலவில் கட்டப்பட்டது. அதேபோன்று, அதே ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் புதிதாக ரூ.2 கோடி செலவில் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
The post சட்டத்தின்படி அனைத்தும் முறையாக நடக்கிறது: பாஜ எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் appeared first on Dinakaran.