மேயர் மகேஷ் அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்கு அமைக்கவும், எரியாத விளக்குகளை சரிசெய்யவும் உத்தவிட்டுள்ளார். இருப்பினும் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. நாகர்கோவில் நகர பகுதிகளுக்குள் இருக்கும் முக்கியமான பாலங்களில் ஒன்று புத்தேரி ரயில்வே மேம்பாலம். இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. நாகர்கோவிலில் இருந்து 4 எண் கொண்ட வழிதட பஸ்கள் இந்த வழியாக இயக்கப்பட்டு வருகிறது. பூதப்பாண்டி, திட்டுவிளை, தடிக்காரக்கோணம், ஞாலம், சீதப்பால், கடுக்கரை, காட்டுபுதூர், சிறமடம், திடல் உள்பட பல்வேறு ஊர்களுக்கு இந்த வழியாக மக்கள் செல்கின்றனர்.
புத்தேரி மேம்பாலத்தில் உள்ள விளக்குளை மாற்றி புதிய எல்இடி விளக்குகளை மாற்ற கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை விளக்குகள் மாற்றப்படவில்லை. தற்போது மேம்பாலத்தில் உள்ள விளக்குகள் சரியாக எரிவது இல்லை. ஒரு சில விளக்குகள் எரிகிறது. மற்ற விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பலத்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். புத்தேரி மேம்பாலத்தில் உள்ள விளக்குகளை மாற்றி எல்இடி விளக்குகள் பொருத்தி இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கும் புத்தேரி மேம்பாலம்; எல்இடி விளக்குகள் மாற்றப்படுமா? appeared first on Dinakaran.