வேகம் எடுக்கும் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷாவை சந்திக்க முக்கிய தலைவர்கள் திட்டம்?

சென்னை: நாளை சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக தலைவர்கள் சந்திக்க திட்டம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் இருக்குமாறு எடப்பாடி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சென்னையில் முகாம். செங்கோட்டையன், தங்கமணி சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில் மற்ற நிர்வாகிகள் சென்னையில் தங்கியுள்ளனர். நாளை இரவு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. சென்னை வரும் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாஜக இடையே கூட்டணிப் பேச்சு நடந்து வருவதை அண்மையில் உறுதி செய்திருந்தார் அமித் ஷா. அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் அமித் ஷா கூறியிருந்தார்.

 

The post வேகம் எடுக்கும் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷாவை சந்திக்க முக்கிய தலைவர்கள் திட்டம்? appeared first on Dinakaran.

Related Stories: