கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைப்பு தீவிரம்

ஊட்டி: கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இந்த நிலையில் கோடை சீசனை முன்னிட்டு பூங்காவை தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் மற்றும் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிக்காக கடந்த வாரம் பெரிய புல் மைதானம் மூடப்பட்டது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகம் வந்ததால், ஓரிரு நாட்கள் பெரிய புல் மைதானத்துக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பராமரிப்பு பணி துவக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய புல் மைதானம் மூடப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப் பட்டுள்ளது. மைதானத்தில் வளர்ந்த புற்களை அகற்றி சமன் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் பெர்ன் புல் மைதானமும் மூடப்பட்டுள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் சிறிய புல் மைதானத்தில் மட்டும் ஓய்வெடுத்துவிட்டு, பூங்காவை சுற்றி பார்த்து விட்டு செல்கின்றனர்.

 

The post கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: