விபத்தில் முதியவர்பலி; டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் கைது

திருவாரூர், ஏப் .4: திருவாரூர் கலெக்டர் அலுவலகம் அருகே கார் மோதி முதியவர் இறந்த சம்பவத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன் (56) அங்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வரும் சிவசுப்பிரமணியன் நேற்று முன்தினம் தனது சொந்த வேலையாக குடும்பத்தினருடன் கார் மூலம் கோயம்புத்தூர் சென்று விட்டு மீண்டும் மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

காரை சிவசுப்பிரமணியன் ஒட்டி சென்றடையில் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் அருகே தண்டலை என்ற இடத்தில் வசித்து வரும் முதியவர் கோபால் (73) என்பவர் குறுக்கு சாலையில் இருந்து மெயின் சாலையினை கடக்க முயன்ற போது எதிர்பாராதமாக சிவசுப்பிரமணியன் ஒட்டி சென்ற கார் முதியவர் கோபால் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கோபால் இறந்தார்.

இந்நிலையில் முதியவர் மீது மோதிவிட்டு சிவசுப்பிரமணியன் தனது காரை நிற்காமல் ஓட்டி சென்ற நிலையில், இது தொடர்பாக அவரது மனைவி ஜெயந்தி (60) என்பவர் திருவாரூர் தாலுக்கா போலீஸ் ஸ்டேஷனில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவர் கோபால் இறந்துவிட்டதாக புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளின் படி கார் நம்பரை கொண்டு சிவசுப்பிரமணியனை கைது செய்தனர்.

The post விபத்தில் முதியவர்பலி; டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: